Super User / 2011 மார்ச் 26 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

(லக்னா பரணமான்ன)
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் நோயாளர்களின் விபரங்களை கணினி மயப்படுத்துவதற்கு தொலைதொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் ஈஹெல்த் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
"நோயாளிகளின் மருத்துவ வரலாறு குறித்த அனைத்து தகவல்களும் கணினிமயப்படுத்தப்படும். ஆலோசனை தகவல்களும் இதில் உள்ளடக்கப்படும் "என தொலைதொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
"இத்திட்டம் இன்னும் ஆரம்பநிலையிலேயே உள்ளது. கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் பரீட்சார்த்தமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் விரைவில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் " என அமைச்சர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .