Super User / 2011 மார்ச் 27 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமளிப்பதற்காக கோரப்பட்ட நிதியுதவி அளவை ஐ.நா. குறைத்துள்ளது.
இதற்காக முன்னர் 51 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஐ.நா. கோரியிருந்தது. தற்போது அத்தொகையை 43 மில்லியன் டொலராக ஐ.நா. குறைத்துள்ளது.
வெள்ள நிவாரணத்திற்கான மாற்றப்பட்ட உதவிக் கோரிக்கைக்கான தொகை அங்கீகாரத்திற்காக நியூயோர்க் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்தவுடன் நன்கொடையாளர்களிடம் முறைப்படி நிதியுதவி கோரப்படும் என இலங்கைக்கான ஐ.நாவின் பதில் வதிவிட பிரதிநிதி அட்னன் கான் தெரிவித்தார். (KB)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago