2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

சேனக டி சில்வாவுக்கு பிணை

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

கடந்த வருட ஜனாதிபதி தேர்தலின்போது, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தேர்தல் செயலாளராக பணியாற்றிய  சேனக டி சில்வாவை பிணையில் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

நீதிபதிகள் சிசிர டி ஆப்ரூ, கே.டி. சித்ரசிறி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் 2 லட்ச ரூபா ரொக்கப் பிணையில் செல்ல சேனக டி சில்வாவுக்கு அனுமதி வழங்கியது.

அத்துடன் சேனக டி சில்வாவின் கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தினதும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் , கடந்த வருடம் பெப்ரவரி 8 ஆம் திகதி சரத் பொன்சேகா கட்சித் தலைவர்கள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தபோது பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்தார்.  அப்போது  சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அடைக்கலம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிரான வழக்கு மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .