2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

வீடுகளில் சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர்களை ஊக்குவிக்குமாறு தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் கோரப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது. ஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவத்றகு வேறு வழிகளை கண்டறியக்கூடும் என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.

சுமூக வலைத்தளங்களை  சிறார்கள் பார்வையிடுவதில் தடுப்தில் நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. எனவே தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்களi பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்துவது தொர்பாக பெற்றோர், பொலிஸ், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உட்பட பல தரப்பினரடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே நாம் 1000 இற்கும் அதிகமான இணையத்தளங்களை நீதிமன்ற உத்தரவின்பேரில் தடை செய்துள்ளோம் என அவர்  கூறினார்.

இதேவேளை மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் தினமும் 13 வயதுக்குட்பட்ட சுமர்  20, 000 சிறார்கள் அவ்வலைத்தளத்தை பயன்படுத்துவதை தடைசெய்து வருவதாக தெரிவித்துள்ளது.


 


  Comments - 0

 • Rafi Tuesday, 29 March 2011 02:13 AM

  Facebook ஐ தடைசெய்வதாக இருந்தால் அதுவே எம் நாட்டு சிறுவர்களுக்கு இந்த இரசாங்கம் செய்யும் ஒரு நன்மையாகும்
  சீரழிந்து போய்க்கொண்டிருக்கும் எம் சமுதாயத்தைப் பாதுகாக்க எனது பங்கு நிச்சயம் உண்டு.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 29 March 2011 09:03 PM

  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று சொல்கிறார்கள் ஆனால் அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வழிகள் இல்லை என்று தெரிகிறது. வாக்களிக்க அடையாள அட்டையை கட்டாயமாக்கியது போல் தான்! அதில் விதி விலக்குகள் உண்டாகி விடும் மேலும் ஒருவர் அடையாள விபரங்களை மற்றவர் பயன்படுத்த முயல்வதையும் கண்டுபிடிக்க கடினம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை முறைத்து ப்பார்க்கின்றவர்கள் எங்கே எங்கேஇருக்கிறவர்களோடு வாஞ்சையாக பார்க்கப்போகின்றனர். எங்கு பார்த்தாலும் பெருமையும் அதனால் ஏற்படும் குரூரப் பார்வையுமாக முதலில் தனது வீட்டிலிருந்து -

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X