2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

த.தே.கூ. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்; சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி, அப்துல் சலாம் யாசீம்)

தமிழ்  தேசிய கூட்டமைப்பு சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதன் காரணமாகவே குறித்த சத்திய பிரமான நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நாடு திரும்பிய பின்னரே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் செய்யும் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலை நகரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருந்தமையால் கடந்த பல மாதங்களாக அவர் இந்தியாவில் சிகிச்சை பெற்றுவந்தமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • pahalavan Tuesday, 29 March 2011 06:13 PM

    tamil thesiya Koodamaippu enru oru kadchi ulluradchi therthalil poddiyedavillai. ilankai tamil arasu kaddchiye poddiyeddathu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .