2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

சந்தேக நபர் தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாகக் கூறி  கைதுசெய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்த சந்தேக நபரொருவர் தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர் அநுராதபுர நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டு சென்றபோதே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அநுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார். ஆரம்ப விசாரணை மூலம் பொலிஸ் சார்ஜன் ஒருவர்; ஒழுங்கீன நடத்தைக்;  குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தப்பிச்சென்றுள்ள சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .