2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் கடத்தப்பட்டு வல்லுறவு

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத்தில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குவைத் சிற்றி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் நகரில் அப்பெண் பணியாற்றும் வீட்டிலிருந்து  அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த இனந்தெரியாத நபர்கள் மூவர் அவரை பின்தொடர்ந்து சென்று, அப்பெண்னை இழுத்து காரொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

28 வயதான இப்பெண் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். தன்னை எஜமானரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு சென்று மேற்படி மூவரும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி மூவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர் என் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X