Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 31 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
தொலைத்தொடர்பு கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகளையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவ்வாணைக்குழு கூறியுள்ளது.
மின்னல் காரணமாக தமது வீட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதாக குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு மாதத்தில் 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வலையமைப்புகள் பிரிவின் பிரதி பணிப்பாளர் தமர்சிறி டி அல்விஸ் தெரிவித்தார்.
செல்லிடத் தொலைபேசி வலையமைப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தொலைத்தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால் தமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் மின்னல் தாக்கம் ஏற்படும் எனவும் குடியிருப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர் என அவர் கூறினார்.
'உலக தரத்திற்கேற்ப இக்கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றினால் ஏற்படும் மின்னல் தாக்கத்தின் அளவு குறித்து தீர்மானிப்பது கடினம். பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளை நாம் உதாசீனப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
'பொதுவாக, உயரமான பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில்தான் தரையிலுள்ள பொருட்களை அல்லது நபர்களை மின்னல் ஈர்க்கும். எனினும் வலிமையான மின்னல் தாக்கும்போது மின்சார வயர்களில் தாக்கம் ஏற்பட்டு வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
'எமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை ஆதாரமற்றவையாகும். எனவே அவற்றின் பாதிப்பு குறித்து எமது ஆய்வுகள் முடிவடையும்வரை தெரியவரமாட்டா' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
01 Jul 2025