2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மயக்க மருந்து கலந்த மென்பானம் வழங்கி பஸ் பயணிகளிடம் கொள்ளை

Super User   / 2011 மார்ச் 31 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணம் செய்த இரு நபர்கள், அந்த பஸ்ஸில் பயணித்த நான்கு இளைஞர்களுக்கு மயக்க மருந்து கலந்த மென் பானத்தை வழங்கி இளைஞர்களின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி தெரிய வருவதாவது:

கடந்த 29 ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து வெலிமடைக்கு புறப்பட்ட  தனியார் பஸ் வண்டியில் பயணித்த நான்கு இளைஞர்களும் அருகில் மேலும் இருந்த இருவர் கையடக்க தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தவாறு இருந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்தின் பின்பு கையடக்க தொலைபேசியை நிறுத்தி விட்டு தமது பையில் இருந்து மென் பானங்களை அருந்தியுள்ளனர்.

இவர்கள் பானம் அருந்திய பின்பு தமக்கு அருகில் அமர்ந்திருந்த நான்கு இளைஞர்களுக்கும் மென்பான போத்தல்கள் நான்கை வழங்கியுள்ளனர். இந்த இளைஞர்களும் மென்பானத்தை குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்பு இவ்விரு நபர்களும் நான்கு இளைஞர்களினதும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளனர்.

பின்பு, நடத்துனர் மயக்கமடைந்த நால்வரையும் கண்டு அவர்களை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   
 


  Comments - 0

 • xlntgson Friday, 01 April 2011 08:58 PM

  மனிதகுணம் அற்றுப்போன காலம்,இதற்கு கடுமையான தண்டனை- சித்திரவதை கொடுத்த காலம் சரித்திரத்தில் காணப்படுகிறது,ஏனென்றால் உபசரிப்பது போல் நடித்து வஞ்சகம் புரிந்தால் மனிதநேயம் மிகவும் பாதிக்கும்,யாரும் உபசரிப்பைக்கூட சந்தேகிப்பர்,பசி தாகத்தில் இருந்தால் கூட பெற்றுக்கொள்ள பயப்படுவர்,சிறு பிள்ளைகளை மிகவும் பாதிக்கும்,இவர்களை கழுவில் ஏற்றினாலும் தகும்,குடிநீர் கேட்டு கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியது போல் நம்பிக்கை மோசடி, உண்டவீண்டுக்கு இரண்டகம்,மனிதர் மனிதருக்கு பயப்படவாகும்!

  Reply : 0       0

  jaliyath Saturday, 02 April 2011 12:51 AM

  பஞ்சம் வந்தால் எல்லாவற்றையும் செய்ய மனது இடங்கொடுக்கும் .இப்படியான கேட்டவர்களுக்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் தான் அவசியம் தேவை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .