2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அணிக்காக திருப்பதியில் ஜனாதிபதி வழிபாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையில் நடைபெறவுள்ள இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றியடைவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி வெங்கடடேஸ்வர கோவிலில் வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை இரவு அல்லது நாளை சனிக்கிழமை அதிகாலை திருப்பதி வெங்கடடேஸ்வர கோவிலுக்கு  சென்று வழிப்பாட்டில் ஈடுபடவுள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெங்கடடேஸ்வர கோவிலில் ஜனாதிபதி மத வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து சனிக்கிழமை கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மும்பைக்கு விமானம் மூலம் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

திருப்பதியிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ரேனிகுன்டா விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கை ஜனாதிபதி வந்திறங்கவுள்ளார்.  (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .