2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஊடக உத்தியோகஸ்தர்கள் அறுவர் விபத்தில் காயம்

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தளை, கலேவெல பிரதேசத்தில் நடைபெற்ற வாகன விபத்தொன்றில் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் தயாரிப்பாளர் ஒருவர் உட்பட ஊடக உத்தியோகஸ்தர்கள்  6 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த வான் மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது. மேற்படி வானின் வாகனத்தின் சாரதி உறக்கத்திலிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பி கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வானின் சாரதி உறக்க கலக்கத்தில் மற்றொரு தனது வானை வாகனத்துடன் மோதியபின் மின்கம்பமொன்றிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அப்பகுதி பிரதேச வாசிகளால் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .