2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டா

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுமையா றிஸ்வி)

தமிழ்,சிங்கள புத்தாண்டிற்கு முன்னராக பேக்கரி உற்பத்திகள், பாண் ஆகியவற்றுக்கான விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாதென பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

'மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டால் உடனடியாக பேக்கரி உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரிப்போம். எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதிலும், இந்த விலை அதிகரிப்பு  மாவின் விலை அதிகரிப்பு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது' என அவர் கூறினார்.

எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக புத்தாண்டிற்கு பின்னர் சங்கத்தின் அங்கத்தவர்கள் ஒன்றுகூடவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, பால்மா வகைகளின் விலையை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தின் அனுமதிக்கு பால்மா கம்பனிகளின் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எந்தவித சாதகமான பதிலும் தங்களுக்கு கிடைக்கவில்லையென அங்கர் மற்றும் மலிபன் பால்மா கம்பனிகள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .