2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்களின் சம உரிமைக்கான சட்ட திருத்தத்துக்கு வலியுறுத்துகிறோம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை மிக முக்கியமானது. அவர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைச் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நிலையில் கடந்த ஓராண்டுக் காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதெனவும், அவர்களின் மறுவாழ்விற்காக ஏராளமான நிதியுதவியை இந்திய மத்திய அரசு செய்துள்ளதெனவும், அவர்கள் வாழ்வு மேம்பட மேலும் உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இனிமேல் தாக்கப்பட மாட்டார்கள் என்றும் சென்னை தீவுத் திடலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சோனியா காந்தி உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .