Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை சுஜாதா தனது 59ஆவது வயதில் இன்று காலை சென்னையில் காலமானார். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சுஜாதா, கே.பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ள இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தவை எனலாம்.
கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், இன்று சென்னையில் தனது வீட்டில் காலமானார்.
2 hours ago
5 hours ago
R. Nirmala Thursday, 07 April 2011 04:16 PM
சுஜாதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம்
Reply : 0 0
xlntgson Friday, 08 April 2011 09:14 PM
வழமையாக எல்லாருக்கும் சொல்வது தான் அவரது ஆத்மா சாந்தி அடைவதாக என்று.
ஏன் அவர் ஆத்மா என்ன ஆனது, தற்கொலை செய்து கொள்ளவில்லையே?
தற்கொலை செய்து கொண்ட ஆத்மா தான் உலகில் குறிப்பிட்ட காலம் வரை அலையும் என்பர்.
(நான் சுஜாதாவின் எதிரி அல்ல. நானும் அவரது நடிப்பை ரசித்திருக்கின்றேன்.
ஆத்மா என்ற சொல்லை வைத்து ஒரு கருத்து!
அவ்வளவுதான்.)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago