2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தகுதியானவர்களுக்கு நியமனங்களை வழங்குக: ஐ.தேக.

Super User   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் அரசியல் ரீதியான நியமனங்களை வழங்க வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கோரியுள்ளது. இத்தகையவர்களால் நுட்பமான இராஜதந்திர விவகாரங்களை கையாள்வதற்கு முடியாது என அக்கட்சி கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகால நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.தே.கவின் சிரேஷ்ட உபதலைவர் லஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கோரினார்.

'மனித உரிமை மீறல்கள், ஊடகங்கள் மீதான அடக்குமுறை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இத்தகைய நபர்களால் முடியாது.
இத்தகைய குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்ப்பட்டுள்ள நாட்டின் புகழை மீள நிலைநிறுத்துவதற்கு பொருத்தமான நபர்களை நியமிக்குமாறு நாம் அரசாங்கத்தைக் கோருகிறோம்' என அவர் தெரிவித்தார்.

'ஆளுங்கட்சியினர் இலங்கையில் ஐ.நாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனினும் நாட்டிற்கு வெளியே வித்தியாசமாக செயற்படுகின்றனர்.  வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அவர்கள் ஒரே மாதிரியாக செயற்படுவதற்கு அவர்களுக்கு துணிவு இருக்க வேண்டும்.

மனித உரிமைகள் ஆணைக்குழு இருப்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூலமே இலங்கையர்கள் அறிந்துகொண்டனர்.  1989 ஆம் ஆண்டு இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆணைக்குழுவிடம் சென்றார்' என லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .