2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

புரோட்பான்ட் இணைய வேகம் அதிகரிப்பு

Super User   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புரோட்பான்ட் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை தாம் விளம்பரப்படுத்தும் வேகத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவு வேகத்தை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது அந்நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புரோட்பான்ட் வேகத்தில் 20 சதவீதமானவற்றையே வழங்கியமை கண்டறியப்பட்டதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

'புரோட்பான்ட் இணைய வேகம் தொடர்பாக நாம் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்வதுடன் தொடர்ச்சியாக நாம் பேசுவோம். தாம் விளம்பரப்படுத்திக் கொள்ளும் அளவு புரோட்பாண்ட் வேகத்தை வழங்காத நிறுவனங்கள் அந்த இலக்கை அடைவதற்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார். (லக்னா பரணமான்ன)

 


  Comments - 0

  • jesuraj Saturday, 09 April 2011 01:59 PM

    Yes its true ......................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X