2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

அரசியல்வாதிகளுக்கு தகுதிகள் வேண்டும்: அமைச்சர் வேல்கம

Super User   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் கழிவறை சுத்தமாக்கும் ஊழியர்களுக்கு க.பொ.த. சாதாரணத் தரம் அடிப்படை கல்வித் தகைமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், இஅமைச்சராகுவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார் வேல்கம  கூறியுள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் 53 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு  கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கல்வித் தகைமை அவசியமானதாக்கப்பட்டிருந்தால் பெரும்பாலான அமைச்சர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

"ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு முறையான பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்பும் கிடைக்கவில்லை. புதிய ஆட்சேர்ப்பு இல்லாததால் பதவி உயர்வுகளை வழங்க முடியாது. முன்னர் தொழிலாளியொருவருக்கான அடிப்படை கல்வித் தகைமை 8 ஆம் வகுப்பாக இருந்தது. இப்போது அது க.பொ.த. சாதாரணத் தரமாக்கப்பட்டுள்ளது. அதனால்  குறைந்த கல்வித் தரமுடைய இளைஞர்களுக்கு கிராமத்தில் தொழில் வாய்ப்பு வழங்குவது கடினமாகும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் குறைந்தபட்சம் 682 ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தேவைப்பட்ட போதிலும் 270 பேர் மாத்திரமே இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
 


  Comments - 0

 • S. Jesunesan Saturday, 09 April 2011 02:45 PM

  Hon. Kumara 'Welcome', but careful; you might be disqualified to hold post as Minister since you're educated.
  Nesaji

  Reply : 0       0

  mahsmali Sunday, 10 April 2011 08:14 PM

  yes, You may carefull to say this. otherwise many of our Ministers are not qualified . Even some one I know he didn't pass three times Tamil then Finaly , became Teacher and MInister. Please wakeup Sri Lankan get some quality Ministers and get Quality Life for Future Sri Lanka.

  Reply : 0       0

  xlntgson Sunday, 10 April 2011 08:44 PM

  பாகிஸ்தானில் பட்டதாரி ஒருவருக்குத் தான் மாகாண தேசிய பாராளுமன்றங்களுக்கு போட்டியிட முடியும் என்று சட்டம் இருக்கிறது. அதனால் பெரிய ஒரு புரட்சி எதுவும் நடந்து விடவில்லை.
  என்றாலும் எழுத்தறிவில்லாதவர்களை நீக்க வழி செய்ய வேண்டும்.
  கணணி அறிவில்லாதவர்களையும் புறக்கணிக்க வேண்டியது வருமோ?
  அறிவில்லாதவர்கள் செயல்படும் விதத்தில் அறிவுடையோரை செயலாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பெரும் விதத்தில் தான் சட்டம் இருக்கிறது ஆனால் மனைவி குழந்தை போன்ற உறவினர்களியே செயலாளர்களாகப் போட்டுக்கொள்வது ஏன்?
  அதை இயலாமற் செய்யவும்.

  Reply : 0       0

  Road runner Monday, 11 April 2011 02:14 AM

  கலாநிதி mervin சில்வாவை விட padikadawarkal nanru

  Reply : 0       0

  hon, minister Monday, 11 April 2011 02:14 AM

  Hon,மினிஸ்டர் kooruom விடயம் 100% sariyana visayam apothu than peopls மதிக்கும் alavoku seyalpada mudium மினிஸ்டர் uriya மரியாதி kedaikum

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .