2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

இதய சத்திரசிகிச்சைகளுக்கு இடையூறு ஏற்படும் அறிகுறி

Super User   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் இடையூறை எதிர்கொள்ள நேரிடலாம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

 தற்போது இதய சத்திரசிகிச்சைகளை இடையூறு இன்றி மேற்கொள்கின்றோம். ஆனால் சத்திரசிகிச்சை பொருட்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாவிட்டால் சில நாட்களுக்கு சத்திரசிகிச்சைகளை நிறுத்திவைக்க நேரிடலாம் என அவர் கூறினார்.

 மருத்துவ விநியோகப் பிரிவுக்கு இது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சத்திரசிகிச்சை பொருட்களை விமானம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (லக்னா பரணமான்ன)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .