2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கம்பஹா டி.ஐ.ஜி, உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கம்பஹா பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எச்.எஸ்.தயானந்த, பேலியகொடை சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் கீத்சிறி கணேகம, பேலியகொடை சோமசிறி பெரேரா ஆகியோர் முறையே வடக்கு மத்திய பிரிவுக்கும் பதுளைக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இவர்களின் இடமாற்றத்திற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும் பேலியகொடை மீன்சந்தையில் கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையுடன் இந்த இடமாற்றத்திற்கு தொடர்பிருக்கலாமென நம்பப்படுகிறது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேலியகொடை மீன்சந்தை தொடர்பில் கப்பம் கோரியதான சந்தேகத்தின் பேரில் 14 பேர் கடந்த புதன்கிழமை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (Supun Dias)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .