2021 மே 15, சனிக்கிழமை

'தொழிற்சங்க தலைவர்களுக்கு கொலை மிரட்டல் '

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆயுதம் வைத்திருக்கும் சிலர், தொழிற்சங்க தலைவர்களை, அவரவர் சங்கங்களிலிருந்து விலகும்படி மிரட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அனைத்து கம்பனி ஊழியர் சங்கம் இன்று கூறியது.

ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய சாதாரண ஊழியர்களை குற்றப்புலனாய்வு பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் அச்சங்கம் கூறியது.

இவ்வாறான அடக்குமுறைகளை கைவிடும்படியும் தொழிற்சங்கத் தலைவர்களை மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்தும்படியும் அரசாங்கத்திடம் மேற்படி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சில ஆயுததாரிகள் தொழிற்சங்கத் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தொழிற்சங்கங்களிலிருந்து விலகிவிடுமாறு மிரட்டியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், கூட்டு தொழிற்சங்கங்களின் ஒன்றியம், வர்த்தக வலய ஊழியர்கள் சாதாரணமான முறையில் விசாரிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விடப்படவில்லை என்று கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .