2021 ஜூன் 16, புதன்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஆண்டு 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

3 வாரங்களுக்குள் ஆண்டு 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றினை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிட முடியுமென கல்வியமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த காலத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பரீட்சைப் பெறுபேற்றிற்காக மாதக்கணக்காக காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.
 
மொத்தமாக 321,401 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் பரீட்சைப் பெறுபேற்றினை பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(DM)


  Comments - 0

  • sabras Thursday, 15 September 2011 04:45 PM

    வெளியாகி விட்டது ஐயா ........................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .