Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பல மாதங்களாக எம்மத்தியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நாட்டின் உயர் கல்வியின் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை உண்டுபண்ண கூடியவையாக இருக்கின்றன. நாம் இவ்வாறு எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளில் ஒன்றான பகடிவதை என்பது பயங்கரமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
இது எமது கல்வி அமைப்புகளை ஆட்கொண்டுள்ளதோடு, இக்கல்வி நிறுவனங்களுக்கு பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உயர் கல்வி ஸ்தாபனத்தின் நல்ல பெயருக்கு இழுக்கும் ஏற்படுத்துகின்றது என பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் சம்பந்தமாக பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி மற்றும் செயலாளர் கலாநிதி டொறன்ஸ் மடுஜித் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழகங்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு இது ஒரு பெரும் தடையாக உள்ளது. அத்துடன், பல்கலைக்கழக அமைப்புகளுக்கு எதிராக எழுந்துள்ள அபாயங்களை எதிர்கொள்ள ஆசிரியரும் மாணவர்களும் கூட்டுணர்ச்சியுடன் செயல்பட எடுக்கும் முயற்சிகளுக்கு பகடிவதை ஒரு பாரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனம் பகடிவதையை, அதன் எந்த வடிவிலும் காணப்பட்டாலும், அதனை வன்மையாக கண்டிக்கிறது. அது பல்கலைக்கழகங்களில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு.
எமது அங்கத்தவர்கள் எப்போதும் அதற்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். தம்மால் இயன்றளவு அதன் விளைவுகளைக் குறைக்க எத்தனித்து, அதை முற்றுமுழுதாக இல்லாதொழிக்க உழைத்துள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சித் திட்டமும், பகடிவதையை ஒழிப்பது என்ற ரீதியில் பார்க்கையில் முற்றுமுழுதாக தோல்வியை தழுவியது எனலாம்.
பல்கலைக்கழக அதிகாரிகள், கல்வியாளர்கள் அரசாங்க செயற்பாட்டாளர்கள் ஆகியவர்களால் மட்டும் பகடிவதையை ஒழித்துக் கட்ட இயலாது. மாணவர்களும் இதற்கெதிராக ஒரு மனமார்ந்த முடிவுக்கு வந்தாலே, எம்மை தொண்டைக் குழியில் கவ்வியிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
இதன் பேரில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செல்வாக்கு செலுத்தும் மாணவ சங்கங்களும், ஏனைய மாணவ சங்கங்களும், பகடிவதையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
உயர் கல்வி அமைச்சரின் கூற்றிற்கெதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செல்வாக்கு செலுத்துகின்ற பல்கலைக்கழகங்களில் மட்டுமன்றி ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பகடிவதை காணப்படுகிறது என்பதை நாம், கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீட ஆசிரிய சங்கத்தின் பகிடிவதை சம்பந்தமான அறிக்கையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்நேரத்தில், பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனமாகிய நாம், கல்வியுடன் தொடர்புபட்ட இரண்டு விடயங்களில் உயர் கல்வி அமைச்சரும், அரசாங்கமும் வகித்த பங்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
முதலாவது, நிர்வாகம் சம்பந்தமான விடயங்களில் ஆக்கிரமிப்பு தன்மையுடன் செயற்பட்டமை, குறிப்பாக, அதி செலவு கூடிய தனியார் பாதுகாப்பு சேவையை பல்கலைக்கழகங்களின் மேல் திணித்தமை, பல்கலைக்கழகங்களை இராணுவமயமாக்குதல், அரசியல்மயமாக்குதல், பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தில் தலையிடுதல், பகடிவதையை தடுப்பது என்ற சாக்கில், மாணவர்களின் ஜனநாயக உரிமையான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பலாத்காரத்தைப் பாவித்தல், அத்துடன் அவற்றை பலவந்தமாக அடக்குதல்.
இரண்டாவதாக, பல்கலைக்கழகங்களை ஆட்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினைகள், குறிப்பாக, பல்கலைக்கழகத்துக்கென ஓதுக்கப்படுகிற நிதியின் அற்பத் தொகை, பல்கலைக்கழக சீர்திருத்தங்களில் கல்விமான்களுடன் கலந்துரையாடாமை, ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு போதியளவ நிதி ஒதுக்காமை, சம்பளம், மற்றும் கல்வியாளர் சமூகத்துக்கு வழங்கிய ஏனைய சலுகைகள் என்பனவற்றை மழுங்கடித்து, பகடிவதையில் மட்டும் கவனம் செலுத்துதல். அரசாங்கத்தின் இந்தப் போக்குகள் எமக்கு அச்சம் தருகின்றன.
உயர் கல்விற்கு எதிராகவும், அதன் அமைப்புக்கு பாதகமாகவும் அரசாங்கம் நடக்காமல், அது சம்பந்தப்பட்ட விடயங்களில் கவனமாகவும், கருத்துடனும் நடக்குமாறு உயர் கல்வி அமைச்சரையும், அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.
Siraj Mohamed Thursday, 02 February 2012 02:05 AM
நீங்க அறிக்கை விட்டுக்கொண்டே இருங்க. நாங்க இங்கு சீனியர்ஸ் ஆல கடும் கஷ்ட படுரம். என் சாபம் சும்மா விடாது.
Reply : 0 0
pasha Thursday, 02 February 2012 02:10 PM
சுற்றி வளைத்து சொல்ல வருவது அவர்களது சம்பள உயர்வு பற்றி.
Reply : 0 0
xlntgson Tuesday, 07 February 2012 05:11 PM
Not only in Universities everywhere some people try to call others names! Call people the way they like to be called otherwise don't call them, at all! Ragging follows suit...the desire to dominate others unfairly.
Reply : 0 0
xlntgson Tuesday, 07 February 2012 05:15 PM
The first step is naming! Call no names, you will be called to the police!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
27 minute ago
35 minute ago