2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிப்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரை நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேற்படி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச, 'யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரை காலமும் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளைப் போன்றே தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும்' என்று கூறினார்.

யுத்தம் காரணமாக காணாமல் பொனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நியமிக்கப்பட்ட மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், இம்மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவிருந்த நிலையிலேயே அக்காலம் எதிர்வரும் ஆகஸ் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .