2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

33 பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

Super User   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அஜித் லால் சாந்த உதய)

அமைச்சரவைத் தீர்மானமொன்றின் அடிப்படையில் 3 பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியசட்கர்களாக பதவி உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளது.

கீழ் மட்டத்திலிருந்த இம்மூன்று பொலிஸாரும் உதவி பொலிஸ் அத்தியசட்கர்களாக (ஏ.எஸ்.பி.) பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக 33 பொலிஸ் பிரதம இன்ஸ்பெக்டர்கள் மேற்படி மனுவில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமைச்சரவை,  பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலர், பிரதமர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .