2021 ஜூன் 21, திங்கட்கிழமை

36 அமைச்சு செயலாளர்களில் ஒரேயொரு சிறுபான்மையினத்தவர் நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 36 அமைச்சுக்களின் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களில் ஒரேயொருவர் சிறுபான்மையினத்தவராவர்.

இவர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள மெரீனா முஹம்மத் ஆவார்.

முதல் முஸ்லிம் பெண் அமைச்சு செயலாளர் என்ற பெருமை இவரையே சாரும்.

இதற்கு முன்னர், மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.(R.A)  Comments - 0

 • xlntgson Tuesday, 27 April 2010 09:37 PM

  இது ஒரு முக்கியமான விடயம் அரசு கவனம் செலுத்துவதில்லை. பாராளுமன்றத்தில் தமிழர்களை வந்து இங்கே தொழில் தொடங்குங்கள் என்று அழைத்தால் போதுமா? தமிழ் முஸ்லிம் திறமைகளுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்றால் அவர்கள் மேற்கை நோக்கி உயிரை பணயமாக வைத்தேனும் செல்ல தொடங்குவர். அங்கே கௌரமான தொழில்கள் கிடைத்து வாழ்ந்தால் அவர்கள் தமிழ் புலம் பெயர்ந்தோர் (diaspora)டயஸ்போரா வோடு சேர்வதை தடுக்க இயலாது. வாருங்கள் வாருங்கள் என்று அழைப்பது இங்கே பாகுபாடுகள் எதுவும் இல்லை என்ற உண்மை செய்தி செல்ல வேண்டும்.

  Reply : 0       0

  nuah Tuesday, 27 April 2010 09:57 PM

  சம்பிக்க ரணவக கேட்டார், தமிழ்- முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று. இதோ ஓர் எடுத்துக்காட்டு. ஏன் அவர்கள் மேற்கு உலக நாடுகளுக்கு ஓடுகின்றார்கள் என்று விளங்குகின்றனரா, அவர் தம் திறமை இங்கே மதிக்கப்படுகிறதா? இவை எவ்வளவு முக்கியமான பதவிகள் என்று உச்ச நீதிமன்றின் பீ. பி. ஜெயசுந்தரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் . ஜனாதிபதி அமைச்சர்கள் இல்லாமலே ஆட்சி செய்கிறார் எப்படி? இவர்களது திறமையும் படிப்பும்தான் உதவுகிறது. என்றால் அத்துணை திறமை உள்ள தமிழர் முஸ்லிம் இல்லையா.

  Reply : 0       0

  srikant Thursday, 29 April 2010 09:13 PM

  வெள்ளைகாரர்கள் தமிழர்க்கு மிக சலுகைகள் அளித்தமையினாலே அவர்கள் அரச சேவைகளில் நிறைந்து காணப்பட்டனர் என்று கூறுகின்றவர்கள் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறுவது விந்தையானது. எப்படியேனும் மூத்த சகோதர மேலாண்மையை ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது. மும்மொழி தெரிந்தவர்க்கு முன்னுரிமை என்பது எல்லா அரசுகளும் சொல்லும் பொய், நம்ப இயலாது! சொல்லொன்று செயலொன்று. வேலை நடந்தால் போதும் என்று நினைப்பதில்லை மாமி உடைத்தால் பொன் குடம், மருமகள் உடைத்தால் மண்குடம் என்று தான் உள்ளது.

  Reply : 0       0

  sheen Friday, 30 April 2010 09:31 PM

  இன்னொரு விடயத்தைக்கவனிக்க வேண்டும். அரச சேவைகளில் இருந்தவர்களும் கூட பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மிரட்டல்களுக்கு மத்தியில் பணியாற்ற விருப்பம் இல்லை என்றும் கூறி பிற நாடுகள் சென்று புலிக்கு இரையாயினர்.
  இதனால் தமிழர் இப்போது அனுபவிக்கும் சலுகைகளே போதும் என்று எண்ணுகின்றனர்.
  உண்மை என்னவெனில் இனஒற்றுமை புதிய அரசில் உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்.

  Reply : 0       0

  sheen Saturday, 01 May 2010 08:45 PM

  இதில் இன்னொரு விடயமும் கவனிக்கப்படல் வேண்டும். அரச சேவைகளில் இருந்தவர்களும் விலகி வெளி நாடு சென்று புலிக்கு இரைபோட்டனர். இதை தடுக்க 'சம்பிக' அவரது கட்சி- தமிழர் மற்றும் ஏனைய இனத்தினர் இரண்டாம் தர பிரஜைகள் என்று துணிந்து கூறும் அளவிற்கு வந்தனர். அச்சுறுத்தல்களுக்கு பயந்து இங்கே பணியாற்ற இயலாமல் சென்றவர்கள், இப்போது அவ்வாறான பயம் இல்லை என்பதை நிறுவ, தமிழர் பொது நிர்வாக சேவைகளில் திறமை அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படப்பார்த்துக்கொள்வது புதிய அரசின் கடமை

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .