2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கம்பளையில் கோஷ்டி மோதல்: 5 பெண்கள் உட்பட 8 பேர் காயம்

Super User   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம் . ரம்ஸீன்)

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரப்பனை எனும் இடத்தில் இன்று  முற்பகல் 11 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காயமடைந்த  நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மோதல் சம்பவத்திற்கு தனிபட்ட தகராறே காரணம் எனவும் பொலிஸ் விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் இரு வீடுகளின் ஐன்னல் கண்ணாடிகள் சேதடைந்துள்ளன. தற்போது அப்பகுதியில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கம்பளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .