2021 ஜூன் 19, சனிக்கிழமை

7 வயது மாணவனை கொன்றவருக்கு மரண தண்டனை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டி.ஜி.சுகதபால)

7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட  ஒருவருக்கு தென் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சறோஜினி குஷலா வீரவர்தன இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சுனில் ஜயக்கொடி அல்லது வடம்பரிஜ் சுனில் அல்லது யக்க என அழைக்கப்படும்  நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சுபுன் திலந்த செனரத் பத்திரன என்ற பாடசாலை மாணவனையே கடந்த 1997 ஆம் ஆண்டு அவர் அடித்துக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக நெலுவ பொலிஸ் பிரிவு தெரிவித்தது. (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .