2026 மார்ச் 19, வியாழக்கிழமை

“70% சம்பள அதிகரிப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்”

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி   70% ஆல் உடனடியாக அதிகரிக்கவேண்டும் என்ற சம்பளநிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறுவழியில்லை என இலங்கைபெருந்தோட்டமுதலாளிமார் சம்மேளனம் (PA) தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வியாபாரநிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பேணவும் சம்பள அதிகரிப்பு உற்பத்தித்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்படவேண்டும். என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) வலியுறுத்தியுள்ளது.

தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிலும், இலங்கை ஏற்கனவே மிகஉயர்ந்த உற்பத்திசெலவு, மிககூடிய நாட்சம்பளம் மற்றும் மிகக்குறைந்த உற்பத்தித்திறனுடன்போராடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சம்பள நிர்ணய சபையால்(Wages Board) புதிதாக அறிவிக்கப்பட்ட தேயிலை துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளம், இந்தியாவின் தேயிலைத்துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதால் உலகசந்தையில் இலங்கை தேயிலையின் உற்பத்திவிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .