2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஆரம்பம்; 700 மாணவர் சமூகம்

Super User   / 2010 ஜனவரி 05 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் 700 மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்
டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி , யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளிலிருந்து 350 ஆசிரியர்கள் இதன் ஆரம்ப் நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், மாணவர்கள் கற்றல் உபகரணங்களுடன்  பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஆசிரியர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜி.ஏ.சந்திரசிறி குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், முதல்த் தடவையாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று ஐந்து பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .