2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கொழும்பு-யாழ். வழித்தடத்தில் 78 தனியார் பஸ் இயக்குநர்களுக்கு அனுமதிப்பத்திரம்

Super User   / 2011 மார்ச் 29 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கியில் சேவையில் ஈடுபடும் 78 தனியார் பஸ் இயக்குநர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வேல்கம வீதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கேள்விப்பத்திரம் கோரப்பட்ட பின்னர் இந்த அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டதாகவும் அனுமதித்திரத்திற்கான குறைந்தபட்ச விலையாக 11 லட்சம் ரூபா குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அப்பேச்சாளர் கூறினார்.

கொழும்பு , யாழ் பஸ் வழித்தடம், அதிகமாக நாடப்படும் பஸ் வழித்தடங்களில் ஒன்றாகும். அவ்வழித்தடத்திற்கான பஸ் அனுமதி தொடர்பாக அதிக சர்ச்சைகள், குற்றச்சாட்டுகளும் இருந்தன. அதனால் இந்த வழித்தடத்திற்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல் வெளிப்படையானதாகவும் குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என அமைச்சர் விரும்பினார் என அவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் பஸ்களை இயக்குவதற்கு வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த வர்த்தகர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சில அரசியல்வாதிகளும் இதில் பங்குபற்றுகின்றனர். அதனால்தான் அமைச்சர் இப்பிரச்சினையை மிக வெளிப்படையாக வெளிப்படையான வகையில் தீர்வுகாண வேண்டும் என விரும்பினார் எனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .