2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மேலும் 81 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபாச காட்சிகளைக்கொண்ட மேலும் 81 இணையத்தளங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் தடை செய்யுமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு சிறுவர் விவகார நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஏற்கெனவே 107 இணையத்தளங்களை தடை செய்யுமாறு இந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.


இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .