2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

9 மாத தாமதத்தின் பின்னர் முஸ்லிம் மீடியா போரம் மாநாடு

Super User   / 2011 மார்ச் 26 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

கடந்த 2010 ஜுன் மாதம் இடம்பெறவிருந்த இந்த மாநாடு நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக தாமதமாகியது. கடந்த வருட பிற்பகுதியில் இடைக்கால தடை உத்தரவு பல நீக்கப்பட்ட பின்னரும் பல தடவை வெள்ள அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை வருடாந்த மாநாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது போரத்தின் தலைவராக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் தலைவராகவும் தினக்குரல் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் செயலாளராகவும் சுயாதீன ஊடகவியலாளர் முஹம்மட் பாயிஸ் பொருளாளராகவும் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, 15 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டது.

தமிழ்மிரர் இணையத்தள ஊடகவியலாளர் ஏ.ஏ.எம்.றிப்தி அலி அதிகூடிய 104 வாக்குகளை பெற்று முதலாமிடத்தில் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் ஜாவிட் முனவ்வர், மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, அஷ்ரப் ஏ.சமத், கலைவாதி கலீல், எஸ்.ஏ.கே.பலீல் ரஹ்மான், எம்.எப்.றிபாஸ், எஸ்.எல்.அஸீஸ், எம்.கே.முபாரக் அலி, திருமதி மும்தாஜ் சரூக், எம்.கே.எம்.அஸ்வர், திருமதி புர்கான் பீ.இப்திகார், எப்.எம்.பைரூஸ் இர்சாத் ஏ.காதர் மற்றும் றஷீட் எம்.ஹபீல் ஆகியோரும் நிறைவேற்றுக்குழுவிற்கு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன் தாஹா எம்.முஸ்மில் ஏ.ஆர்.ஏ.பரீல் மற்றும் ஜே.இஸட்.ஏ.நமாஷ் ஆகியோரை போரத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தலைவர் என்.எம்.அமீனினால் முன்மொழிய, சபை அங்கீகரித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .