2025 மே 19, திங்கட்கிழமை

தமிழக தேர்தல் முடிவுகள் இந்திய அரசுக்கு வழி காட்டுமா?

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

"அத்திப்பூ' போல் ஒரு கூட்டணி பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் தமிழகத்தில் அமைந்திருக்கிறது. எக்கூட்டணியுமே இல்லாமல் தனித்து நிற்கிறது காங்கிரஸ் கட்சி. அக்கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு தற்போது நடிகர் கார்த்திக்கு முயற்சி செய்து பார்க்கிறார். ஆனால் அவர் கேட்கும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் வேட்பாளர் அறிவிக்காமல் எஞ்சியிருப்பது தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி மட்டும்தான் என்பதால் அக்கூட்டணியும் "நங்கூரம்' பாய்ச்சியது போல் அசையாமல் நிற்கிறது.

எந்தக் கூட்டணி எப்படி அமைந்தாலும் இந்த முறை தேசிய அரசியலில் தமிழகத்திந் பங்கு எப்படியிருக்கப் போகிறது என்பது "விடுகதை' போல்தான் தமிழக தேர்தல் களம் அமைந்திருக்கிறது. 1971}லிருந்து 1998 வரையுள்ள 28 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் காலமாக தமிழகத் தேர்தலில் இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகமோ, அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகமோ, காங்கிரஸýடன் கைகோர்த்து சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாôடளுமன்றத் தேர்தல்களை சந்தித்தன. ஒரு சில தேர்தல்களில் குறிப்பாக 1971}ல் சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொகுதிகள் ஏதும் பெறாமலேயே தேர்தல் கூட்டணியில் இருந்தது. 1977 மற்றும் 1989 ல் தனியாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்தக் காலம் காங்கிரஸ் கட்சியின் பொற்காலம் என்றுசொல்ல வேண்டும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சி குறைந்த பட்சம் 20 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட காலம் அது.

இக்காலம் போன பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கஷ்ட காலம் பிறந்தது. அதுதான் 1996}ல் அக்கட்சியிலிருந்து மூப்பனார் விலகி தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியை உருவாக்கியது.  இதன் பிறகு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஏதும் இன்றி தனிமரமாக தமிழகத் தேர்தல் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலை மீண்டும் இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பா.ஜ.க.விற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அல்லாத கூட்டணி அக்கட்சி துவங்கிய 34 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கிடைத்திருக்கிறது. இக்கூட்டணி தி.மு.க., அ.தி.மு.க. போல் மாபெரும் வெற்றிக்கு கைகொடுக்கப் போகிறதா என்பது கவலைக்குரிய விஷயம். ஆனால் "தீண்டத்தகாத கட்சி பா.ஜ.க.' என்று நினைத்த கட்சிகள் கூட இன்று "நரேந்திரமோடி' பெயரைச் சொல்லி, வாக்காளர்களை சந்திக்க ரெடியாகி விட்டன. ஆனால் இந்தக் கட்சிகள் எல்லாமே தி.மு.க., அ.தி.மு.க. போன்ற தமிழகம் முழுவதும் மோடி பெயரை மார்க்கெட் பண்ணும் விதத்தில் கிளைகளைக் கொண்ட கட்சிகள் அல்ல.

தமிழகம் முழுவதும் கிளைக்கழகங்கள் இல்லாத கட்சிகள்தான் பா.ஜ.க.வில் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் இல்லாமல் நிற்கின்றன. ஆனால் இந்த இரு கட்சிகளுக்குமே சொந்தக் காலில் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றி பெறும் அளவிற்கு சுயபலம் இல்லை. கூட்டணி பலமே இவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இரு கட்சிகளில் எந்தக் கட்சிக்கு அதிக எம்.பி.க்கள் கிடைக்கும் என்பது திரைப்படத்தில் வரும் "க்ளைமாக்ஸ்' காட்சி போலவே இருக்கிறது. திரைப்படத்தில் திரைக்கதையை எழுதியவருக்கு க்ளைமாக்ஸ் காட்சி என்னவென்று தெரியும். அந்த படத்தில் நடித்தவர்களுக்கு தெரியும். ஆனால் அரங்கில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு கடைசி ரீலில்தான் க்ளைமாக்ஸ் காட்சி என்னவென்று தெரியும். அது போல் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் அனைவருக்குமே நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் "க்ளைமாக்ஸ்' காட்சி என்னவென்பது தெரியவில்லை. அது ஏப்ரல் 24}ம் தேதி வாக்குச் சாவடிக்கு வரப்போகும் வாக்காளர்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்நிலையில் "தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் நான் நிற்பது போல் நினைத்து வெற்றிக் கணியைப் பறிக்க பாடுபடுங்கள்' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன் ரத்தத்தின் ரத்தங்களான கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி கட்டளை பிறப்பித்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் தன் தொண்டர்களுக்கு அவர் எழுதும் முதல் கடிதம். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, "பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு (தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரானது) விசாரணையில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. அதனால்  அந்த விவரங்களை அச்சடித்து வாக்காளர்களுக்கு விநியோகியுங்கள்' என்று உத்தரவிட்டிருக்கிறார். இந்த இரு தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தை வெகு சீரியஸôக எடுத்துக் கொண்டிருப்பதிலிருந்தே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 எம்.பி.க்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை வாக்காளர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

தமிழக எம்.பி.க்கள் இதுவரை சுமார் 43 வருடங்களாக (1971ல் இந்திரா காந்தி அமைச்சரவைக்கு தி.மு.க. ஆதரவளித்ததில் இருந்து) மத்திய அரசு அமைவதில் முக்கியப் பங்கு ஆற்றியிருக்கிறார்கள். "யார் அடுத்த பிரதமர்' என்பதை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி நிர்ணயித்து வந்திருக்கின்றன.  அந்த அந்தஸ்தும், கெüரவமும் இந்த முறை தி.மு.க.விற்கு கிடைக்குமா அல்லது அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா என்பதுதான் அனைத்து அரசியல் வாதிகளும் தலையைப் பிய்த்துக் கொண்டு விடை தேடும் கேள்வி. ஏனென்றால் தேசியக் கட்சிகளுக்கு உருப்படியான கூட்டணி இல்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற முக்கியக் கட்சிகளுக்கு தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை} ஒரு வித்தியாசமான தேர்தல் களத்தை தமிழக வாக்காளர்கள் 1989}க்குப் பிறகு சந்திக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார் என்பது எங்கோ தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விடை போல் ஆளுக்கொரு மூலையில் அலச வேண்டிய நிர்பந்தத்தில் அரசியல் விமர்சகர்கள் இருக்கிறார்கள். பத்திரிக்கைகளில் வரும் சர்வேக்களுக்கும், மக்களின் மன நிலைக்கும் கூட அவ்வளவு ஒற்றுமை இருப்பதாக கள நிலைமை இல்லை. இப்படியொரு சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டில் யார் நிர்ணயிக்கும் தலைவர் டெல்லியில் பிரதமராக வரப் போகிறார் என்பது சுவாரஸ்யமான கேள்வி.

சுமார் 43 வருடங்களுக்குப் பிறகு தமிழக தேர்தல் களம் இன்னார்தான் வெற்றி பெறப் போகிறார் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.விற்கு தலைவலியாகவும், காங்கிரஸ் கட்சி பிரிக்கும் வாக்குகள் தி.மு.க.விற்கு திருகுவலியாகவும் இருக்கப் போகின்றன என்பது மட்டும் இப்போது புரிகிறது. அதே சமயம், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வாக்களிக்காமல் புறக்கணித்தது தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது என்றே தெரிகிறது. அதனால்தான் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் போன்றோர் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்துக் கூறியிருக்கிறார்கள். ஜி.கே.வாசனைப் பொறுத்தமட்டில், "இந்திய அரசின் நிலைப்பாடு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது' என்றே கூறிவிட்டார்.


ஆனால் தி.மு.க. கண்டித்த அளவிற்கு இப்பிரச்சினையில் அ.தி.மு.க. மத்திய அரசை கண்டிக்கவில்லை. "இந்தியாவே இப்படியொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்' என்பதுடன் அ.தி.மு.க. நிறுத்திக் கொண்டது. அதே சமயம் தி.மு.க.வோ, "மத்திய அரசின் முடிவு தமிழர்களை உலக நாடுகள் மத்தியில் வெட்கித் தலைகுணிய வைத்து விட்டது. தமிழர்களின் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது' என்று கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் தமிழக தேர்தல் களம் என்பது இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து இருக்கப் போவதில்லை. ஏனென்றால், இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலைப்பாட்டை எப்படி தமிழகத்தில் உள்ள கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதோ, அதே மாதிரிதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடும். காங்கிரஸ் போலவே தனி ஈழத்திற்கோ, சர்வதேச விசாரணையில் வேறு விதமான ஊக்கமளித்தலுக்கோ பா.ஜ.க. தலைமையிலான அரசு அமைந்தாலும் நடக்கப் போவதில்லை. இரு தேசியக் கட்சிகளுக்குமே வெளியுறவுக் கொள்கை என்பது ஏறக்குறைய ஒன்றேதான்!

இப்படியொரு சூழ்நிலையில் தமிழக தேர்தல் களத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் வாக்காளர்கள்? அதை வைத்து இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரு தீர்வுக்கு தமிழகம் துணை போய் விட முடியுமா? என்பதெல்லாம் இன்றைக்கு எழுந்து நின்று நடனமாடிக் கொண்டிருக்கும் முக்கியக் கேள்விகள். ஆனால் ஒன்று நிச்சயம்} 43 வருடங்கள் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தி.மு.க.விற்கோ, அ.தி.மு.க.விற்கோ "சுளையாக'க் கொடுத்த  தமிழக வாக்காளர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதே இன்றைய இமாலய எதிர்பார்ப்பு. அப்படி அவர்கள் கொடுக்கப் போகும் முடிவுகள் அகில இந்திய  அளவில் அமையப் போகும் அரசுக்கு வழிகாட்ட முடியுமா} குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினையிலாவது அது சாத்தியமா?}இப்படி கேள்விகள் பல அடுக்கிக் கொண்டே போகலாம்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X