2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாசற்படியில் விசாரணை

Kanagaraj   / 2014 ஜூன் 15 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

ஐ.நா. மனித உரிமை பேரவையில், இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் தொடர்ந்து மூன்றாண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பிரேரணைகளையும் நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், அதனால் என்ன எதிர்ப்பார்த்தது என்பது தெளிவில்லை.

தாம் எதிர்த்தால், மனித உரிமை பேரவை அந்தப் பிரேரணையை ரத்துச் செய்யும் என்றோ அல்லது அதன் கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை மனித உரிமை பேரவை கைவிடும் என்றோ இலங்கை தலைவர்கள் நினைத்தார்களோ தெரியாது.

ஜனாதிபதி அவ்வாறு நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவ்வாறு நினைக்கும் அமைச்சர்கள் இலங்கை அரசாங்கத்தில் இருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன், இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க, மர்சூகி தருஸ்மானின் தலைமையில் குழுவொன்றை நியமித்த போது, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி அமைச்சர் விமல் வீரவன்ச, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். உண்ணாவிரதத்திற்கு முன்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய வீரவன்ச, ஒரு அமைச்சரும் போராட்டத்தில் குதிக்கப் போகிறார் என்பதை பான்-கீ-மூன் அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

இலங்கையின் அமைச்சர் ஒருவர் உண்ணவிரதம் இருந்தால், ஐ.நா. செயலாளர் நாயகம் தமது முடிவை இரத்துச் செய்துவிடுவார் என்று, வீரவன்ச நினைத்தார் போலும். இல்லாவிட்டால் தமது உண்ணவிரதத்தை சாகும் வரையிலான உண்ணாவிரதமாக அறிவிப்பாரா? தமது உயிரை காக்க, பான்-கீ-மூன் மேற்படி குழுவை இரத்துச் செய்வார் என்று நினைக்கும் அளவிற்கு, இலங்கை அமைச்சர்கள் உலக அரசியலைப் பற்றிய அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். வீரவன்ச அல்ல, சத்தாம் ஹூஸைன், கத்தாபி, கிம்-ஜொங்-இல் போன்றவர்கள் செய்த போராட்டங்களையே ஐ.நா. பொருட்படுத்தவில்லை.

அமெரிக்கப் பிரேரணைகளை நிராகரிக்கிறோம்...நிராகரிக்கிறோம் என்று இலங்கை தலைவர்கள் கூறிக் கொண்டு இருக்கும் போது, அந்த பிரேரணைகளின் காரம் அதிகரித்துக் கொண்டே சென்று, இப்போது இலங்கையில் புலிகள் அமைப்புக்கு எதிரான போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக, மனித உரிமை பேரவை விசாரணைக் குழுவொன்றையும் நியமித்துள்ளது. அரசாங்கம் அதனையும் நிராகரிப்பதாக கூறுகிறது.

2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மனித உரிமை பேரவையில், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்க

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X