2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புரட்சிகர மாற்றம்?

George   / 2014 ஜூலை 29 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.காசிநாதன்
இந்திய நீதித்துறையில் அதிலிருந்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் பெயர் மார்கண்டேய கட்ஜூ. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2004 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டு 11 மாதம் அப்பதவியில் இருந்தார். பிறகு திடீரென்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டவர் அங்கு ஆறு மாதம் பணியிலிருந்தார். அங்கிருந்து இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அப்பதவியில் ஐந்து வருடங்கள் இருந்து 2011 செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி ஓய்வு பெற்றார். அதாவது முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இதுதான் இந்த நீதிபதியின் பின்னணி.

மார்கண்டேய கட்ஜூ
ஓய்வுபெற்ற மார்கண்டேய கட்ஜூ 2011 அக்டோபர் 5 ஆம் திகதி இந்திய பத்திரிக்கை பேரவை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறாக எழுதினால், அவர்கள் இந்த பேரவையில் முறையிட முடியும். அங்கு விசாரணை நடைபெறும். அந்த விசாரணை டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும்.

பத்திரிக்கை எழுதியது தவறு என்று தெரியவந்தால், குறிப்பாக சம்பந்தப்பட்டவரிடம் கருத்துக் கேட்காமல் எழுதியிருந்தால் இந்திய பத்திரிக்கை பேரவையின் வாயிலாக கண்டனம் (ADMONITION) தெரிவிக்கப்படும். ஒருவர் மீது குற்றம் கூறி பத்திரிக்கையில் எழுதும் போது அவர் தரப்பு விளக்கத்தையும் கேட்டு எழுத வேண்டும் என்ற இயற்கை நீதியினை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பதுதான் பத்திரிக்கை பேரவை.

இப்படியொரு பத்திரிக்கை பேரவையின் தலைவர் பொறுப்பில் இருக்கும் மார்கண்டேய  கட்ஜூதான் இறந்து போன அசோக்குமார் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அவர் பெயரை அவர் தன் குற்றச்சாட்டில் வெளியிடவில்லை என்றாலும், ஒரு தமிழக அரசியல் தலைவருக்கு பிணை வழங்கினார். அந்த தலைவரின் கட்சியின் ஆதரவில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தது. அதைப் பயன்படுத்தி இந்திய உளவுத்துறையின் அறிக்கையையும், நீதிபதிகளை பரிந்துரை செய்யும் காலேஜியத்தில் உள்ள நீதிபதிகளின் எதிர்ப்பையும் மீறி நிரந்தர நீதிபதி பதவி அசோக்குமாருக்கு கொடுக்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டின் சுருக்கம்.

அசோக்குமார் சென்னை செசன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மேம்பால ஊழல் வழக்கில் 2001 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதமைச்சரான போது கைது செய்யப்பட்டார். அந்த நள்ளிரவு கைது அப்போது படு பிரபலம். கைது செய்யப்பட்ட கலைஞர் கருணாநிதி நீதிபதி அசோக்குமார் முன்பு நிறுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, முதல் தகவல் அறிக்கையில் இருந்த சில குறைகளைச் சுட்டிக்காட்டி விட்டு காவல்துறையைப் பார்த்து, உங்கள் இதயம் தசையால் ஆனதா, களிமண்ணால் ஆனதா என்று கோபமான கேள்வியை எழுப்பினார். ஆனாலும் அவர் கருணாநிதிக்கு பிணை வழங்கவில்லை. கைது செய்தார்.

அப்போது மத்தியில் தி.மு.க. ஆதரவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாஜ்பாய் தலைமையில் நடைபெற்று வந்தது. கருணாநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. கூட்டணிக் கட்சியாக இருந்த மாநில பா.ஜ.க., அ.தி.மு.க. அரசை அரசியல் சட்டப் பிரிவு 356யைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்று தீர்மானமே போட்டது.

  அசோக்குமார்                                                                                                                                                                                                                                
தமிழக கவர்னராக இருந்த பாத்திமா பீவி மாற்றப்பட்டு, ஆந்திர பிரதேச கவர்னராக இருந்த ரங்கராஜன் கூடுதல் சார்ஜாக தமிழகத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். கருணாநிதியுடன் அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு போன்றNhரும் கைது செய்யப்பட்டார்கள். இப்படி மத்திய அமைச்சர்கள் கைது, கூட்டணிக் கட்சித் தலைவராக இருக்கும் கருணாநிதி கைது என்ற சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த பிரதமர் வாஜ்பாய் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கே நேரடியாக போன் செய்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.

அப்போது இருந்த மத்திய அமைச்சர்கள் கூட மத்திய அமைச்சர்களை கைது செய்துள்ள மாநில அரசை கலைக்க வேண்டும் என்றெலலாம் கோரிக்கைகளை வைத்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் சென்னை வந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாநிதியை சந்தித்துவிட்டுச் சென்றார். அந்த அளவிற்கு மாநில அரசுக்கு நெருக்கடி வந்த நிலையில், மனிதநேய அடிப்படையில் கருணாநிதியை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன். ஆனால் அவர் மீதுள்ள வழக்கு தொடரும் என்று அறிக்கை விடுத்தார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா.

இதனடிப்படையில் அந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. என்ற புலனாய்வு அமைப்பின் அதிகாரி செசன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், கருணாநிதியிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை அதனால் அவரை விடுதலை செய்யலாம் என்று கூறினார். அதன் அடிப்படையில் கருணாநிதி விடுதலை செய்யப்பட்டார்.                                                                                               

கருணாநிதியின் விடுதலையில் கட்ஜூ கூறியது போல் நீதிபதி அசோக்குமாருக்கு முக்கிய பங்கு இல்லை. தமிழக அரசு விடுதலை செய்தது. அதை புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்தின் முன்பு சொன்னார். அவ்வளவுதான். ஆனால் கருணாநிதியை கைது செய்ய கொண்டு வந்த போது, காவல்துறையைப் பார்த்து, உங்கள் இதயம் தசையால் ஆனதா?, களிமண்ணால் ஆனதா?? (Your heart is made up of muscle or clay?)  என்று எழுப்பிய கேள்வி, அசோக்குமார் ஏதோ தி.மு.க.விற்கு வேண்டியவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் அவரின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து 1980-களிலேய முன்னாள் இந்திய சட்ட அமைச்சர் ஏ.கே.சென் தலைமையிலான விசாரணைக் கமிஷனுக்கு உறுப்பினராக அசோக்குமாரை எம்.ஜி.ஆரே நியமித்தார்.

அசோக்குமாரின் உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தைப் பொறுத்தமட்டில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இருந்த போதே நியமிக்கப்பட்டார். தற்போது இந்திய நிதியமைச்சராக இருக்கும் அருண்ஜெட்லிதான் அப்போது இந்திய சட்ட அமைச்சர். 3.4.2003 அன்று நியமிக்கப்பட்டார். பொதுவாக உயர்நீதிமன்றத்திற்கு முதலில் கூடுதல் நீதிபதியாக நியமிப்பார்கள். பிறகு இரு வருடங்கள் கழித்து நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பார்கள். இதுதான் இந்திய நீதித்துறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைணிறை.

அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த வருடம் அசோக்குமார் மட்டுமின்றி அவருடன் நியமிக்கப்பட்ட எட்டு மேலதிக நீதிபதிகளுக்கும் நான்கு மாதம் மேலும் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது.  பிறகு 27.7.2005 அன்று எட்டு பேரில் ஏழு பேர் நிரந்தர நீதிபதிகளாக்கப்பட்டார்கள். ஆனால் அசோக்குமாருக்கு மட்டும் மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. அதாவது கூடுதல் நீதிபதியாகவே இருந்தார். அதன்பிறகு மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டது. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரத்திலும் கூட அசோக்குமார் கூடுதல் நீதிபதியாகவே நீடித்தாரே தவிர, நிரந்தர நீதிபதியாகவில்லை. இந்நிலையில் 3.2.2007-ல்தான் அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார். இதைத்தான் மார்கண்டேய கட்ஜூ குறை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அசோக்குமாரின் நியமனத்தை இவருக்கு முன்பு இந்தியாவின் பிரபல வழக்கறிஞராக இருக்கும் சாந்திபுசன் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு போனார். அங்கே வழக்கு தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அர்ஸித் பஸ்யாத், எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூடுதல் நீதிபதிகளை (Additional Judge)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X