2025 மே 02, வெள்ளிக்கிழமை

’அங்கிகாரத்துடனேயே புலனாய்வு நிறுவனங்கள் வந்தன’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உள்ளிட்ட அனைத்து புலனாய்வு நிறுவனங்களும் உரிய அங்கிகாரத்துடனேயே இலங்கைக்கு வருகை தந்தது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 21/4 , இடம்பெயற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே, அந்நிறுவனங்கள் இலங்கைக்கு வந்தது என்றும் விசாரணைகளின் போது, தடய மாதிரிகளை விசாரணை அதிகாரிகள் பெற்றிருந்தால், அது சட்டரீதியான முறைகளுக்கு அமையவே பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

மேலும் தடய மாதிரிகள் அனைத்தும், நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே வழங்கப்பட்டன என்றும் இதனால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு, எந்த தடையும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .