2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஐவருக்கு பணித்தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பணியாற்றிவரும்  ஐவருக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், கோபுரத்தின் மேல் ஏறி அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், கடமையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த அதிகாரிகளுக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய, இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுள்தெனிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .