2021 மே 13, வியாழக்கிழமை

அசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு

S. Shivany   / 2021 மார்ச் 07 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவுக்கு எதிராக, பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(07)  முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக, அரசியல் கூட்டம் ஒன்றில்  அசோக் அபேசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில், உடன் விசாரணை நடத்த வேண்டும் என, முறைப்பாட்டாளர்கள் தங்களது  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.   

பொதுஜன பெரமுனவின  பாராளுமன்ற உறுப்பினர்களான ரமித்த பண்டார தென்னகோன், சாமிந்த கிரிந்திகொட, மதுர விதானகே, சஞ்ஜீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க ஆகியோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .