2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 27 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - மஹையாவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 50 வயதுடையவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், சாம்பல் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சடலம் கண்டி வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X