2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

அதிகரித்த உச்சத்தை தொட்ட மரக்கரி விலை

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளது, ஏனெனில் தொடர்ச்சியான சீரற்ற வானிலை மற்றும் பேரிடர் நிலைமை காரணமாக மிகவும்  கடுமையாக சீர்குலைத்தன.

காய்கறி விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மீன் விலைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, பேலியகொடை மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அறிவித்தன.

விநியோகங்கள் பற்றாக்குறையால் இந்த பொருளாதார மையங்கள்  வெறிச்சோடி காணப்பட்டன, இதனால் வர்த்தகர்கள் குறைந்த அளவு பொருட்களை மட்டுமே வைத்திருந்தனர்,

பேலியகொடை மத்திய நிலையத்தில் உச்சத்தை எட்டிய மரக்கறியின் விலை கேரட் ஒரு கிலோ ரூ. 1,500, போன்சு ரூ. 1,300, லீக்ஸ் ரூ. 1,200, மற்றும் முட்டைக்கோஸ் ஒரு கிலோவுக்கு ரூ. 900 முதல் ரூ. 1,000 வரை விற்பனையாகின்றது.

மற்றைய காய்கறிகளும் சாதாரன அதிகரிப்பைப் பதிவு செய்தன, பூசணி ஒரு கிலோ ரூ. 600, கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ. 900, பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 1,500 என உயர்ந்தன. பல காய்கறிகளின் விநியோகம் மிகவும் குறைவாகவோ அல்லது முழுமையாகக் கிடைக்கவில்லை நிலையில் உள்ளது.

பேலியகொடை மீன் சந்தையிலும் இவ்வாறான நிலை காணகூடியதாக உள்ளது. பலாயா மற்றும் லின்னாவின் மொத்த விலை கிலோ ரூ. 800 என அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் சாலயா கிலோ ரூ. 600 என விற்பனை செய்யப்படுகின்றது.
சீரற்ற வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களினால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாததால் மீன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறினார் வியாபாரி . 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X