Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து தேசிய பூங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலையடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை, புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகள் குழு ஆகியவை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
உணவகத்தை சோதனை செய்தபோது, 130 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஒன்றரை லீற்றர் குடிநீர் போத்தல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
ஒன்றரை லிற்றர் குடிநீர் போத்தல் ஒன்றுக்கு கூடுதலாக 70 ரூபாய் வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
மேலும், இந்த உணவகத்தில் விற்கப்படும் அனைத்து உணவு மற்றும் பானங்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .