2021 மே 13, வியாழக்கிழமை

அதிபர் பதவிகளுக்கு வெற்றிடம்

J.A. George   / 2021 மார்ச் 02 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டிப் பரீட்சைக்கு பதிலாக முறையான நேர்முகத் தேர்வை நடத்தி, இலங்கை அதிபர் சேவைக்கான மூன்றாம் தரத்திற்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர், பேராசிரியர்  ஜி.எல். பீரிஸினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையால் போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு ஒரு வருடத்திற்கு அதிகமான காலம் தேவை என்பதால் முறையான நேர்முகத் தேர்வை நடத்தி அதிபர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று, தரம் இரண்டு மற்றும் மூன்றாம் தரங்களுக்குரிய 4,600 வெற்றிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .