2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் அதிகரிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வருமானமும் அதிகரித்துள்ளதென நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி மாத்திரம் குறித்த வீதிகளில் 1,25,000இற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதுடன், இதன் மூலம் 32 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்

கடந்த 20ஆம் திகதி தொடக்கம் தினந்தோறும்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளூடாகப் பயணிப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏனைய நாள்களில் 28- 30 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் குறித்த விடுமுறைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 60 சதவீத வருமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாதாரண நாள்களில் குறித்த இரு அதிவேக நெடுஞ்சாலைகளில் 75,000 வாகனங்கள் பயணிக்கும் என்றும் நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .