2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அதி நவீன கைத்தொலைபேசிகளுடன் இருவர் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி 10 கோடி ரூபாய் பெறுமதியுடைய அதிநவீன கைத்தொலைபேசிகளை  நாட்டிற்குள் கொண்டு வந்த இருவர் புதன்கிழமை (27) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களான 24 வயதுடைய வர்த்தகர் மற்றும் 32 வயதுடைய தொழிற்சாலை மேற்பார்வையாளர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள்  என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்  மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அவர்களின் 3 பைகளில் இருந்து, அதி நவீன  கைத்தொலைபேசிகள் 955  கைப்பற்றப்பட்டுள்ளது.

 சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களை தடுத்து வைத்து  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 டி.கே.ஜி. கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .