Janu / 2026 ஜனவரி 19 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் குறித்த மருத்துவமனையில் வைத்து தனது அந்தரங்க உறுப்பு ஸ்கேன் செய்யப்பட்டதாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த பெண் தனது மார்பெலும்பு பகுதியில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற காலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதுடன் அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் பரிந்துரைத்துள்ளார்.
இதன்போது அனுமதியின்றி தனது அந்தரங்க உறுப்புகள் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக எந்தவித அறிக்கையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .