2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘அந்த அமைச்சர் யார்?’

Editorial   / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

அமைச்சுகளுக்கான விடயதானங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில், 30க்கும் மேற்பட்ட விடயங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்த முஜிபூர் ரஹ்மான் எம்.பி, பாதுகாப்பு அமைச்சர் யாரென இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், புதிய அரசாங்கத்தின் கீழ், அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தாலும், அமைச்சுகள் குறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஒருவருக்கு, மூன்று அமைச்சுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளதால், 3 அமைச்சுகளுக்கமான வரப்பிரசாதங்கள், ஓர் அமைச்சருக்கு முழுமையாகக் கிடைக்குமென்றார்.

இராஜாங்க அமைச்சர்களுக்கான கடமைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படவில்லை என்பதால், மக்கள் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் பொம்மைகளாகவே இராஜாங்க அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக, தேசியப் பொலிஸ் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள் சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்த அவர், நல்லாட்சியில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள், அரசியல் தலையீடில்லாமல் இயங்குவதற்கான சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதா என வினவினார்.

மில்லேனியம் சேலஞ்ச் கோர்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தம் தொடர்பில், உதய கம்மன்பில எம்.பி நல்லவற்றைக் கூறிவருகிறார் எனத் தெரிவித்த முஜிபூர் ரஹ்மான், அவருடைய மூளை இப்போதுதான் 70 சதவீதம் இயங்குகிறது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .