2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டைகள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் எனனும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 011 2784208, 0112784537, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 1911 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன், 0112784422 எனும் பெஃக்ஸ் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டுத் விவரங்களை அறியலாம் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .