2021 மே 17, திங்கட்கிழமை

’அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயவும்’

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக, உயர்நீதிமன்றத்துக்கு ஏதாவது அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் நால்வர் வலியுறுத்தியுள்ளனர். 

பிரதம நீதியரசருக்கு கடிதம் மூலம் அந்த நான்கு சட்டத்தரணிகளும் நேற்று (01) முறைப்பாடு செய்துள்ளனர். 

சட்டத்தரணிகளான சேனக பெரேரா, அச்சலா செனவிரத்ன, நாமல் ராஜபக்ஸ, தம்பையா ஜெயரத்தினராஜா ஆகிய சட்டத்தரணிகளால் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் இந்த முறைப்பாடு அடங்கிய கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. 

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, 2019ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி ஆகிய காலப்பகுதிகளுக்குள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரை மூலம், உயர்நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயுமாறே அதில் கோரப்பட்டுள்ளது.  

இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட இலக்கம் 2157 / 44 என்ற அதிவிசேட வர்த்தமானி மூலம், நீதிமன்றம் அல்லது நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எவ்வித அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரை மூலம், உயர்நீதிமன்றத்தின் கீர்த்தி, சுயாதீன அதிகாரம், மக்களின் நம்பிக்கையைக் குறைவாக மதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா அரசியல் அநீதிக்கு உள்ளாகியுள்ளார் என்றும் அவருக்கு எதிராக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கெதிராக அவர் முன்வைத்துள்ள மேன்முறையீடு தீர்ப்பை, மீண்டும் ஆராயுமாறு பரிந்துரைப்பது ஊடாக, நீதிமன்றத்தின் நியாயம், நீதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகச் சட்டத்தரணிகள் தங்களுடைய கடிதத்தின் மூலமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .