2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அமைச்சரின் மகளை அட்டை கடித்தது

Editorial   / 2021 மே 15 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தாருடன் மாத்தளைக்கு சென்றிருந்த வேளையிலேயே, அங்கு பங்களா ஒன்றில் தங்கியிருந்த போதே, அட்டைக்கடிக்கு உள்ளாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், தம்புள்ளை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி வரையிலும் அரசாங்கத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, அமைச்சரின் மகள், குடும்பத்தினரு​டன் சுற்றுலா சென்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.  

அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ், அவரது மகள் சிகிச்சைப்பெற்று வருகின்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .