2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

அம்பானியின் புதிய ‘கோல்டன்’ கார்: இத்தனை கோடியா?

Editorial   / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திய நிலையில்இ தற்போது அனந்த் அம்பானி வாங்கியுள்ள புதிய சொகுசு கார் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அனந்த் அம்பானி தனது கார் சேகரிப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்.கிளாஸ் ரக காரைச் சேர்த்துள்ளார்.

மேலும் சாதாரணமாகவே பல கோடி மதிப்புடைய இந்த காரைஇ அவர் முழுவதுமாக தங்க நிறத்தில் மின்னும் வகையில் வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கு தங்கம் போலவே ஜொலிக்கும் இந்த கார்இ சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக உள்ளது.

இந்த பிரத்யேகமான தங்க நிற காரின் விலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இந்த காரின் அடிப்படை விலையே சில கோடிகளைத் தொடும் நிலையில், ஆனந்த் அம்பானி செய்துள்ள தனிப்பயனாக்கப்பட்ட மாற்றங்கள் அதன் விலையை மேலும் பல மடங்காக உயர்த்தியுள்ளது

இந்நிலையில் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி கார்களை வைத்துள்ள அம்பானி குடும்பத்தின் கார் வரிசையில், இந்த தங்க கார் தற்போது ஒரு விலைமதிப்பற்ற வைரமாக இணைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X